Sri Lanka Tamil News Site

வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் தந்தை, மகள் , மருமகன் பலி

- Advertisement -

மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில், தந்தை, மகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததுடன், தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!