விடுமுறைக்காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

விடுமுறையில் செல்லும் நபர்கள், சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதால் அதைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் எனவும் எச்சரித்தார்.

வீடுகளில் யாரும் இல்லாததை இதன் மூலம் அறிந்துகொள்ளும் குற்றவாளிகள்,  வீடுகளை உடைத்து உள்நுழையப் பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியதுடன்,

எனவே தமது பயணங்கள் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருள் சோதனைகள் அதிகரிப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,

போதைப்பொருள் வர்த்தகம் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.