விஞ்ஞான வினா விடை நூல் வெளியீட்டு நிகழ்வு
-கல்முனை நிருபர்-
விஞ்ஞான பாடத்தை கற்கும் மாணவர்களுக்கு இலகு முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மாணவர்களுக்கான விஞ்ஞான வினா விடை தொகுப்பு அடங்கிய விஞ்ஞான தேனருவி தரம்-06, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம்-07, விஞ்ஞான தேனருவி தரம்-09 ஆகிய 03 விஞ்ஞான நூல்கள் வெளியீடு, லீடர் அஷ்ரப் வித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது .
இதன் போது, பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய அதிபர் எம்.ஐ.இல்யாஸ் கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, சாய்ந்தமருது அல் -ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் டி.கே.எம். சிராஜ், லீடர் அஷ்ரப் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
நூலாசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் 20 வருட காலம் கற்பித்தல் துறையில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.