விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுடன் திருமணமா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவை திருமணம் செய்ய போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.

திரையில் மனங்களை கவர்ந்த விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா ஜோடிக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது என்பது தான் தென்னிந்திய சினிமாவின் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

2018ஆம் ஆண்டு வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’, 2019 இல் வெளியான ‘டியர் காமரேட்’ படங்கள் மூலம், எவர்க்ரீன் ஜோடியாக ரசிகர்கள் மனதில் பதிந்த ஜோடி விஜய் தேவாரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

இந் நிலையில் பெப்ரவரியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை காதல் ஜோடி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் நெட்டிசன்கள் உறுதியே செய்துவிட்ட நிலையில், இது குறித்து விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா இருவரும் எந்தவித விளக்கமும் தர முன் வராமலே இருந்தனர்.

இதனால் இவர்களின் திருமண செய்தி மக்கள் மத்தியில் உறுதியே ஆனது. தற்போது தனது மவுனத்தை களைத்துள்ள நடிகர் விஜயதேவரகொண்டா இதற்கான விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், தனக்கு பிப்ரவரி மாதத்தில் திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்க போவதில்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என ஊடகங்கள் விரும்புவது போல் உள்ளதாகவும் கிண்டலாக கூறினார்.

மேலும், விட்டால் என் கையை பிடித்து என்னக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.