வாழைச்சேனையில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரான் கூழாவடி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து தவராசா (வயது-61) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த இராகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.