வார இறுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே மின்வெட்டு

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு  பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன் பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோல், ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி நேரம் வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும்.