வாக்காளர் பட்டியலை நிறைவு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையாளர் அலுவலகம்

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காலதாமதப் படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலில், குடும்பத்திலிருக்கும் 18 வயதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் அல்லது வீட்டிலிருக்கும் சகலரதும் தகவல்களும் உள்ளடக்கப்படவேண்டியது அவசியமெனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார்.

அதற்கமைய, நிலையான பதிவை திருத்தாமல், திருமணம், கற்றல் நடவடிக்கை அல்லது வேறு காரணங்களினால் மாற்றம் பெற்றுள்ள நபர்கள் சகலரும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக, வாக்களிக்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.