வாகரையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபர் வத்தவப் பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்.

தன்னுடைய தோட்டத்துக்கு மின்சார சபையில் முறையாக மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில்,

தோட்டத்துக்குள் பன்றி மற்றும் காட்டு மிருகங்கள் வருவதினால் அவற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக முறையற்ற விதத்தில் மின்சாரத்தினை பயன்படுத்தியுள்ளார், என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

முறையற்ற விதத்தில் மின்சாரத்துடன் கம்பி இணைக்கப்பட்டதினால் மின்சாரம் தாக்கி இவ் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவிகின்றனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.