வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் முதல் 6 மாதங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 29,871 பேருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 15,754 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்