வவுனியா விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது

வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இருவரும் கைதாகியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான இரண்டு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.