வழுக்கி விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

மடுல்சிமை ரொபேரி பகுதியில் மூதாட்டி ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ரொபேரியா, எலமான் தோட்ட 22 இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் 73 வயதுடைய மூதாட்டி  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூதாட்டி தனது வீட்டுக்கு அருகாமையில் வீதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற வேளையில் வழுக்கி கீழே விழ்ந்தது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சம்பவம் இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் மடுல்சிமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்