வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைப் புலி

தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தைப் புலியின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றொக்வூட் தோட்ட தேயிலை தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி இந்தச் சிறுத்தைப்புலி உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தைப் புலியின் சடலத்தை தோட்டத் தொழிலாளர்கள் கண்டு தமது அலுவலகத்துக்கு அறிவித்ததாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.