வனிந்து ஹசரங்கவிற்கு தடை விதித்தது ஐ.சி.சி

இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு ஐசிசியினால் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆவேசமாக நடந்து கொண்டதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நெறிமுறைகளை மீறியதாக கூறப்படும் வனிந்து ஹசரங்கவிற்கு ஐசிசியினால் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.