வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000 ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது
நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக கடலுக்கு செல்லும் மீனவ குடும்பங்களுக்கு தொழில் இன்மை ஏற்பட்டுள்ளமையினை கருத்தில் கொண்டு, கனடாவில் வசிக்கும் நிஷான், மம்தா தம்பதியினரின் செல்வப் புதல்வன் கரிகாலனின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு நிதி உதவியுடன் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணக்கம் வாழ்க தமிழ்’ அமைப்பின் ஊடாக இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் மற்றும் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பிரவீன் ஆகியோரின் ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.