வட மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்

-யாழ் நிருபர்-

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி மூலமே இந்த நியமனம் வழங்கப்படுகின்றது.

இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களின் அரச அதிபராக பணியாற்றதோடு, ஓய்வின் பின்னர் நாட்டில் 52 நாள் ஆட்சி ஏற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வகித்த அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார்.