வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 23 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சாராய போத்தல்களுடன். குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர்