வடிகானில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இருந்து பெண்ணொருவர் இன்று புதன் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய யாசக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், குறித்த மரணம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கபட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.