வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வு
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம,சிறப்பு,கௌரவ விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் தமிழ்மொழி வாழ்த்தும் இடம் பெற்றதை தொடர்ந்து செம்பியன்பற்று மகளிர் விவகார குழுவினரின் ஏற்பாட்டில் வரவேற்பு நடனமும் அதனை தொடர்ந்து வரவேற்புரை, இடம் பெற்றது.
தொடர்ந்து தலைமை உரையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்புரைகளை சட்ட உதவி உத்தியோகத்தர் ந.ரோபின்சா, வடக்கு மாகாண தொழில்துறை திணைக்கள பணிப்பாளர் செ.வனஜா, யாழ்ப்பாணம் செயற்பாட்டு நிறுவன இணைப்பாளர் ச.சுகிர்தராஜ், சொலிடாறிரி நிறுவன இணைப்பாளர் க.கிருசாந், உட்பட பலரும் ஆற்றினர்.
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பெண் தொழில் முயற்சியாளர்களகளான அம்பன் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த ஜீவராணி காண்டீபன், குடத்தனை உற்பத்தி கிராம் நிர்வாகம், செம்பியன் பற்று வடக்கு கிராமத்தை சேர்ந்த கி.பவளாம்பிகை ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான கடன்களும் வழங்கப்பட்டன.
இதில் நன்றி உரையினை மகளிர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ரோகினி தியாகராசா நிகழ்த்தினார்.
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகழில் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், தலைமை கிராம உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் காவல்துறை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.