“வடக்கின் பெரும்போர்” பெருந்துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்
-யாழ் நிருபர்-
வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.