வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 01 ஆம் திகதி 23.30 மணி அளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் 10.3° வடக்கு அட்சரேகை மற்றும் 85.3° கிழக்கு தீர்க்கரேகையில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஞாயிற்று கிழமை புயலாக வலுப்பெறவுள்ளது.

 

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 5 ஆம் திகதிக்குள் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.