லீசிங் நிறுவனங்களால் இனி வாகனங்களை தூக்க முடியாது

குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கையின்படி, குத்தகை நிறுவனங்களால் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில் கடந்த 8ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.