லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாப்ஸ் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.