லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அரசாங்கம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.