லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும்.

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ஆயிரத்து 502 ரூபா.

இதுதவிர 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுஇ 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்