ரயிலுடன் லொறி மோதி விபத்து

புகையிர கடவையை கடக்க முயன்ற கூலர் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில் அலவ்வ ரயில் நிலையத்துக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.