ரயிலில் மோதி பல்கலை மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவன் நேற்று திங்கட்கிழமை ரயிலில் மோதி சம்பவ இடத்திலிலேயே உயிரழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் பேராதெனிய ரயில் நிலையத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது, கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த திசல் கிட்ஸரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவன் ஹெட்போன் அணிந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டு ரயில் பாதையில் பயணித்ததால் இந்த விபத்து நடைப்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.