ரணிலே சிறந்த தெரிவு என்கிறார் விக்னேஸ்வரன்

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த தெரிவு என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார்.

புதன்கிழமை பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்ப வைபவத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிய விக்னேஸ்வரன் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விக்கிரமசிங்க தன்னுடன் பேசியதாகக் கூறினார்.

ஆனால் பேசிய விடயத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

அடு்த்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வரும் வேட்பாளர்களர்கள் மத்தியில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சிறந்த வேட்பாளர் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.