யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்-

கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.

இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இதனை யாழ் . மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன் ராஜ்  நடாத்தி வைத்தார்.

தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று ‘யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்’ என்னும் தலைப்பிலான சிறப்பு கூட்டுப்போதனையும் இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.