யாழ்.மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
-யாழ் நிருபர்-
யாழ். மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் மக்கள் வாழ்க்கையை நசுக்கிடும் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது
போராட்டக்காரர்கள் இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.
போராட்டம் காரணமாக யாழ். மாநகரில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.