யாழ். கொரோனா நிலையங்களில் மோசடி : யாழ் சுகாதார பணிமனை கணக்காளருக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்-

யாழில் கொரோனா இடைத் தங்கல் நிலையங்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் கணக்காளர் தர்மசீலனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.

மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் அகற்றப்படும் போது அதில் இருந்த பல இலட்சம் ரூபா பொருட்கள் வரவுப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் மாயமாப் போனது.

குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் , பிரதமர் அலுவலகம் வடக்கு மாகாண ஆளுனரை விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் விசாரணைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையின் கடமையாற்றும் கணக்காளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு, விரைவில் அவரது இடத்துக்கு பெண் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.