யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை மெருகூட்டி நிற்கிறது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டி நிற்கிறது என யாழ் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் புகழாரம் சூட்டினார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை இந்திய நட்புறவின் சின்னமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசின் அரசின் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்காக இந்திய அரசினால் கையளிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

தமிழ் மக்களுக்காக இந்திய அரசும் இந்திய தூதரகமும் அசை அத்திவாரமாக தொடர்ந்த செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.