வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த ஒரு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழா இன்று நடைபெற்றது.
வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்று தரிசித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை வீட்டில் இருந்த நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.