யாழில் யாசகம் பெற்று கொழும்பில் வீடு கட்டும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் யாசகம் செய்து கொழும்பில் வீடு கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ். நகர் பகுதியில் சிறுவர்கள் சிலர் யாசகம் பெற்றுவந்த நிலையில் நபர் ஒருவர், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிஸார் பிள்ளைகளிடம் நடத்திய விசாரணையில் பெற்றோர்கள் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர்களிடம் பொலிஸார், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் “தாங்கள் கொழும்பு வத்தளையில் வசிப்பவர்கள் என்றும், அங்கு சொந்தமாக வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே தாம் இப்படி குடும்பத்தோடு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து யாசகம் எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

அத்தோடு தங்கள் செலவுபோக ஒரு நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சேமிப்பதாகவும் தெரிவித்த குழந்தைகளின் பெற்றோர், பத்து அல்லது பதினைந்து நாட்கள் இங்கு யாசகம் பெற்ற பின்னர் அந்த பணத்தை கொண்டு வீடு கட்டும் வேலையை பார்பதாகவும், அந்த பணம் முடிந்த பின்னர் மீண்டும் யாசகம் பெற செல்வதாகவும் தம்பதிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பிரதேசத்திற்கு தாம் யாசகம் பெற செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.