யாழில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

-யாழ் நிருபர்-

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.