யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்-

இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது கட்சி உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, தொடர்ந்து பேரணியாக ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.