யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது.
பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது. தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்