மோட்டார் சைக்கிள்களை திருடியவர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தெகிவளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து 2 கிராம் 130 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.