மொரட்டுமுல்ல பெண் கொலை : தேடப்பட்ட சந்தேகநபர் கைது

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை பெண் ஒருவரைத் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மொரட்டுவ,  கீழ் இந்திபெத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், சம்பவத்தின் போது சந்தேகநபர் அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் ஸ்மார்ட்ஃபோன் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மொரட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.