மேலைத்தேய வாத்திய இசைக்குழு போட்டியில் கல்முனை பாடசாலைகள் சாதனை !

 

கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியானது 125ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வெற்றிகள் பலவற்றை குவித்துக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை வலய மட்டத்தில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஆண் மற்றும் பெண் மாணவ மேலைத்தேய வாத்திய (Western Band) இசைக்குழு போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) முதலாம் மற்றும். இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியானது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் சிறப்பாக ஒழுகுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பலத்த போட்டிகளின் மத்தியில் இதில் பங்குபற்றிய ஆண் மாணவ மேலைத்தேய இசை குழுவானது முதலாம் இடத்தையும், பெண் மாணவ மேலைத்தேய இசை குழுவானது இரன்டாமிடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது.

இவ் மாணவர்களை ஊக்குவித்த அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் , பெண் மாணவிகளின் மேலைத்தேய இசை குழுவுக்கு பொறுப்பாகவும் வழிகாட்டியாகவும் உள்ள பிரதி அதிபர் அருட்சகோதரி எம். பிரியசாந்தி , பொறுப்பாசிரியரான திருமதி எஸ். சுரேஷ் ஆண் மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசை குழுவுக்கு பொறுப்பாக உள்ள அருட்சகோதரர் ஏ. தேவராஜா, பயிற்றுவிப்பாளரான எஸ். நிர்மல் ராஜா மற்றும் உதவிகளை புரிந்த பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தற்போது பிரத்தியேக வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பெற்றோர் மத்தியில் கல்வி மாத்திரம் அல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பிள்ளைகளை பங்கு பற்ற ஊக்குவிப்பளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டுள்ளது.

இப்போட்டியின் மூன்றாம் இடத்தை கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் தனதாக்கி கொண்டது.