மூன்று நாட்களுக்கு மின்தடை இல்லை

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.