மூத்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர் விபத்தில் மரணம்

இலங்கை தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகவியலாளரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் அகால மரணமானார். புலம்பெயர் ஊடகத்துறைக்கு பாரிய இழப்பாகும்.

இலங்கை வானொலியில் தனது பணியை ஆரம்பித்த இவர் பிபிசி தமிழோசையிலும் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சிஇ ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர் ஆவார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்