முழுமையாக குறைவடையும் மின்கட்டணம்

புதிய திருத்தத்தின் மூலம் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டண சதவீதத்தை முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் புதன் கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “உள்நாட்டு மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும்.

சுற்றுலாத்துறையில் 12 சதவீத மின் கட்டண உயர்வை ஒக்டோபர் மாதத்தில் முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களின் மின்கட்டணம் ஒக்டோபர் மாதத்தில் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளது.