முட்டையின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

லங்கா சதொச நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, முட்டையொன்றின் விலை 36 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்திற்கு முன்னர் லங்கா சதொச நிறுவனங்களில் முட்டை ஒன்று 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை பண்டிகைக் காலத்தில் நான்கு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.