
முட்டையின் விலை அதிகரிப்பு?
முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை தீவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், முட்டை பாவனையும் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும், முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.