முச்சக்கரவண்டி குத்தகை பணத்தை செலுத்த முடியாத தந்தை எடுத்த தவறான முடிவு

கண்டியில் முச்சக்கரவண்டியின் குத்தகைத் தவணையை செலுத்த முடியாமல் ஒருவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். பிரியங்கர (வயது – 45) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கில் பணிபுரிந்து கடந்த டிசெம்பர் மாதம் நாட்டுக்கு வந்திருந்ததாகவும், 5 இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகையாக இருந்த குத்தகை பணத்தை (லீசிங்) செலுத்த முடியாத காரணத்தினால் அவரது முச்சக்கர வண்டியை எடுத்துச் செல்வதாக எச்சரித்துள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாதிக் சித்தீக்கினால் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.