முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

தனமல்வில – உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.