முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட பொது மக்கள் நேற்று திங்கட்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டியினுல் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தொடர்பிலும்இ மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தற்போது 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பொலிஸாரால் விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைகள் மேற்கொண்டு சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24