மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு

ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது, இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.

1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த தொல்பொருட்கள் அண்மையில், உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், குறித்த தொல்பொருட்களை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் நாளையும் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குரிய மேலும் பல தொல்பொருட்களை நாட்டுக்கு மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு அரசாங்கங்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கு இடையில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.