மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த கைக்குண்டை நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், அது தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக உத்தரவிடுமாறு கோரியிருந்தனர்.

அதனை ஆராய்ந்த நீதவான், குறித்த கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்