மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம்

இன்று திங்கட்கிழமை மின் துண்டிப்பு 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அநிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளது.  முன்னதாக

அந்த வகையில், A முதல் L  வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.